பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில், பணியாளர் நியமனத்திற்கு லஞ்ச பெற்ற விவகாரம் - தமிழக பொது கணக்காளர் அருண் கோயல் உட்பட 4 பேரை கைது செய்து சி.பி.ஐ. நடவடிக்‍கை

Mar 24 2018 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் பணியாளர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற புகாரில், கணக்‍கு தணிக்‍கை அலுவலக பொதுக்‍ கணக்‍காளர் அருண் கோயல் உட்பட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

தமிழக அரசின் வரவு மற்றும் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் மத்திய அரசின் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுக்‍ கணக்‍காளராக இருக்‍கும் அருண் கோயல் தலைமையிலான குழுவினர், தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளின் வருமானம் மற்றும் செலவு குறித்தும் தணிக்கை செய்து, ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடுவார்கள். குறிப்பாக நிதிநிலை அறிக்‍கை தாக்கல் செய்தவுடன், பொதுக்‍ கணக்‍காளர் தனது அறிக்கையை வெளியிடுவார். இதனால் பொதுக்‍ கணக்‍காளர் மிகவும் நேர்மையானவராகவும், திறமையானவராகவும் இருப்பார். இந்நிலையில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை கோட்ட கணக்‍காளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளுக்‍கு, பொதுக்‍ கணக்‍காளர் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பொதுக்‍ கணக்‍காளர் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து லஞ்சம் பெற்றதாக பொதுக்‍ கணக்‍காளர் அருண்கோயலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த மூத்த கணக்காளர் கஜேந்திரன், கணக்காளர் பாலசந்திரன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00