கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகள் : ஆற்றை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Apr 19 2018 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டத்தில் ஜீவாதாரமாக விளங்கும் கெடிலம் ஆற்றில் அதிகரித்து வரும் ஆக்‍கிரமிப்புகள், மக்‍கள் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியினரின் ஆக்‍கிரமிப்புகள் அகற்றப்படாமல், கரையை பலப்படுத்த 22 கிலோமீட்டர் தொலைவுக்‍கு 22 கோடி ரூபாய்க்‍கு ஒப்பந்தம் விடப்பட்டு பணம் விரயமாவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வேளையில், ஆக்கிரமிப்பில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்போது தான் நான் உங்களை சுனாமியிலிருந்து காப்பாற்றுவேன் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் கடலூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே தோற்றமெடுத்து 112 கிலோமீட்டர் பயணம் செய்து கடலூர் மாவட்டத்தை வந்து சேர்ந்து வங்க கடலில் கலக்கிறது. இந்த நதியின் கரை பகுதியை பலப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு மாண்புமிகு மறைந்த முதலமைச்சர் அம்மா உத்தரவின் பேரில் கெடிலம் நதியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிட்டிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் நீர்வழிதடம் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறபித்தது. பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அதன்படி கடலூரில் உள்ள கெடிலம் நதியின் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

இந்நிலையில், கெடிலம் நதியின் வடக்குபுறம் உள்ள கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 400க்கு மேற்பட்ட ஏழை எளியவர்களின் குடிசை வீடுகள் அகற்றப்பட்டது. ஆனால் எதிர்புறம் உள்ள கரையில் உள்ள பெரு முதலாளிகள், ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை அகற்றாமல் அவர்களுக்கு சாதகமாக 200 மீட்டர் இருக்கவேண்டிய கெடிலம் நதியின் உட்புற அகலத்தை 140 மீட்டராக குறைத்து அணையின் கரையை பலப்படுத்தும் வேலையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் திருவந்திபுரம் முதல் 22 கிலோமீட்டர் தொலைவு கரையை பலப்படுத்த ரூபாய் 22 கோடி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி தரமற்றதாக நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில் கடலூர் நகரம் முழுவதும் "ஆக்கிரமிப்பில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்போது தான் நான் உங்களை சுனாமியிலிருந்து காப்பாற்றுவேன்" மற்றும் "கடலூர் மக்களின் உயிர் பிரச்னை கெடிலம் ஆறு" போன்ற சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் குறித்து மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பில் இருந்து கெடிலம் ஆறு காப்பாற்றப்படவேண்டும் என மக்கள் ஒரு பக்கம் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கும் நேரத்தில், மறுபக்கம் ஆற்று கரையினை ஆக்கிரமித்து ஆளும் கட்சியினர் கட்டிடம் கட்டும் அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00