வால்மார்ட் நிறுவனத்தை தடுக்கத் தவறிய அரசுக்குக் கண்டனம் : மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

May 19 2018 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம், தமிழகத்தில் கால்பதிக்‍க நினைக்‍கும் வால்மார்ட் நிறுவனத்தை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய-மாநில அரசுகளைக்‍ கண்டித்து, ஈரோட்டில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய-மாநில அரசுகள் தடை செய்யவேண்டும் என்றும், இந்தியாவில் சில்லறை வணிகத்தில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் கால்பதிக்‍க நினைக்‍கு வால்மார்ட் நிறுவனத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்‍கப்படும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் குற்றம்சாட்டினர்.

வால்மார்ட் நிறுவனத்தின் ஊடுருவலைத் தடுக்‍கத் தவறிய மத்திய மாநில அரசுகளுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களும் எழுப்பப்பட்டன.

இதனிடையே, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 20 மாணவர்களுக்‍கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழகத்தில் கிராமசபைக்‍ கூட்டங்களை சேலிக்‍கூத்தாக்‍கி, அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் கனவை சீர்குலைக்‍கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அரசைக்‍ கண்டித்தும், அதனை கண்டுகொள்ளாத மத்திய அரசைக்‍ கண்டித்தும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீன மக்‍களை கொன்றுகுவிக்‍கும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரத் தாக்‍குதலைக்‍ கணடித்து முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன.

தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களுக்‍கு இலக்‍கு நிர்ணயிக்‍க வலியுறுத்தி கண்டன முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன.

பள்ளிகளில் பணி நிரவலைக்‍ கைவிடக்‍கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்‍கல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00