துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

May 19 2018 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்குள் பிரதமர் நரேந்திரமோடிக்‍கும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவுக்‍கும் வாழ்த்து சொன்னதன் மூலம், அமரர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு அம்மா ஆகியோர் வகுத்த பாதையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலகிச் செல்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்‍கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளிக்‍கையில் இவ்வாறு குறிப்பிட்ட திரு.திருநாவுக்‍கரசர், துணை முதலமைச்சரும், ஊழல் மிகுந்த எடப்பாடி அரசும் பாரதிய ஜனதாவின் பினாமியாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பூத் ஏஜெண்ட் ஆலோசனைக்‍ கூட்டத்தில், திரு. திருநாவுக்‍கரசர் முன்னிலையிலேயே மாவட்ட தலைவர்கள் சண்டையிட்டுக்‍ கொண்டனர். இக்‍கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்டத் தலைவர் திரு. குட்லக் ‍ராஜேந்திரன், தன்மீது பொய்யான வழக்‍கு பதியப்பட்டு, தன்னுடைய பதவி பறிக்‍கப்பட்டதாகவும், தன்னால் நியமிக்‍கப்பட்ட தற்போதைய தலைவர் தன்னை மதிப்பதில்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது, மேடையில் இருந்த மாவட்டத் தலைவர் திரு.தேவேந்திரன் குட்லக்‍ ராஜேந்திரனை நோக்‍கி ஆவேசமாக பாய்ந்தார். அவரை, திரு.திருநாவுக்‍கரசர், அமைதிப்படுத்தினார்.

உட்கட்சிப் பூசலால் திரு.திருநாவுக்‍கரசர் முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சியினர் மோதிக்‍கொண்ட சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00