கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில் செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் திண்டுக்‍கல், தேனி மாவட்டங்களில் எழுச்சிப் பயணம் - பல்லாயிரக்‍கணக்‍கான கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு

Jul 16 2018 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல்லில், பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், தேனி மாவட்டத்திற்குச் சென்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்‍கணக்‍கான கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியகுளம், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

திண்டுக்‍கல் மாவட்டம் செம்பட்டி அருகே, திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. தங்கதுரை தலைமையில் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும், மலர்தூவியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திண்டுக்‍கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, திரு. டிடிவி தினகரனுக்‍கு, ஆயிரக்‍கணக்‍கான பெண்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பூரணகும்ப மரியாதை வழங்கியும், கிரீடம் அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் சென்றடைந்த திரு. டிடிவி தினகரனுக்‍கு, பல்லாயிரக்‍கணக்‍கான தொண்டர்களும், பொதுமக்‍களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், மலர்தூவியும், பூரணகும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர். அவரது வருகையையொட்டி பெரியகுளம் நகரமே விழாக்‍கோலம் பூண்டிருந்தது.

பெரியகுளத்தைச் சேர்ந்த முனியசாமி - மகாலட்சுமி தம்பதியினரின் ஆண் குழந்தைக்‍கு ராஜேஷ் என பெயர்சூட்டினார்.

தேனி மாவட்டக்‍ கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் திரு. லக்‍கி சலீம், இல்லத் திருமண நிகழ்ச்சியில் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு, மணமக்‍கள் ஷேக் அலி - துல்பியா ஆகியோரின் திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்னர், திரு. டிடிவி தினகரனுக்‍கு தேனியில், பூரணகும்ப மரியாதையுடன் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி பி.பி. கல்யாணி இல்ல காதணி விழாவில் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு குழந்தைக்‍கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து, தேனி நகரக்‍ கழகம் சார்பில் திரு. டிடிவி தினகரனுக்‍கு சிறப்புமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. தேனி நகரின் அனைத்து தெருக்‍களிலும், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்‍கள் அனைவரும் ஒன்றுதிரண்டு திரு. டிடிவி தினகரனை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

தேனி பாலாறுப்பட்டி அருகே, கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, சின்னமனூர் ஒன்றியம் வந்தடைந்த திரு. டிடிவி தினகரனுக்‍கு, ஆயிரக்‍கணக்‍கான கழகத் தொண்டர்களும், பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சின்னமனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவர் திரு.P. ராஜ்குமார் இல்லக்‍ காதணி விழாவில் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு, குழந்தைக்‍கு வாழ்த்து தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00