நீலகிரியில் நீர் மின்சாரம் தயாரிக்க தேக்கி வைக்கப்படும் அணைகள் நிரம்பின : உபரி நீர் திறப்பால் ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Aug 14 2018 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் நீர் மின்சாரம் தயாரிக்க தேக்கி வைக்கப்படும் 10 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 4 அணைகளின் உபரி நீர் திறக்கபட்டுள்ளது. எமரால்டு, கன்னேரி, மந்தனை உள்ளிட்ட ஆற்றங் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் நீர் மின்சாரம் தயாரிக்க தேக்கி வைக்கப்படும் அணைகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, முக்குருத்தி, குந்தா, கெத்தை, காமராஜர் சாகர், பைகாரா, கிளன்மார்கன், மரவகண்டி உள்ளிட்ட 10 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானி அணை, 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி அணை, 89 அடி உயரம் கொண்ட குந்தா அணை, 98 அடி உயரம் கொண்ட பைகாரா ஆகிய 4 அணைகளிலிருந்து நீர் திறந்து விடபட்டுள்ளது. இதனால் வெளியேற்றப்படும் நீர் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் எமரால்டு, கன்னேரி ஆற்றோர பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. உபரி நீரில் மட்டும் 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்து வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00