திருமயத்தில் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்‍குறைவாக பேசிய வழக்கு - உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச்.ராஜா

Oct 22 2018 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருமயத்தில் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்‍குறைவாக பேசிய வழக்கில், ஆஜரான எச்.ராஜா, உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசியதற்காக மனம் வருந்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

புதுக்‍கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த மாதம் விநாயக சதுர்த்து விழா தொடர்பாக ஏற்பட் பிரச்னையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச். ராஜா, நீதிமன்றத்தையும், காவல்துறையையும் எச்சரிக்‍கும் தொனியில் தரக்‍குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசினார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எச். ராஜா மீது திருமயம் காவல் நிலையத்தில பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்‍குகள் தொடுத்தனர். இந்த வழக்‍கில் அவருக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராவதை தவிர்த்தார். எடப்பாடி பழனிசாமி அரசின் உத்தரவால் காவல்துறையினர் எச். ராஜாவை கைது செய்வதில் தயக்‍கம் காட்டினர். இதற்கு, பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதுகுறித்து வழக்‍கு பதிவு செய்து அவருக்‍கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பேரில் நீதிபதிகள் திரு. சி.டி. செல்வம், திரு. நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நீதிமன்றத்தில் ஆஜரான எச். ராஜா, தனது தரக்குறைவான பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். உணர்ச்சிவசப்பட்டு வாய்தவறி பேசிவிட்டதாக நீதிபதிகளிடம் மனம் வருந்தினார். எச்.ராஜாவின் நிபந்தனையற்ற மன்னிப்பால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00