தமிழகத்தின் பல இடங்களில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.25 லட்சம் வரை மோசடி : மோசடி செய்த பணத்தில் 5 மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை

Aug 26 2019 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பல இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த, ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டத்தில் சீர்காழி, சட்டநாதபுரம், புத்தூர், மங்கைமடம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அடகு கடைகளில் ஒருவர் போலி நகைகளை அடகு வைத்து 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை மோசடியாக பெற்றுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அடகு கடைக்‍காரர்கள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி ஆசாமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், மோசடி செய்த நபர் திருவாரூர் மாவட்டம் பேரையூர் சேர்ந்த மாதவன் என்பதை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கார், இருசக்கர வாகனம், அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த போலீசார் விசாரணையில், மாதவன் தமிழகம் முழுவதும் பல அடகு கடைகளில் போலி தங்க நகைகளை வைத்து, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததும், அந்த பணத்தை வைத்து தனது 5 மனைவிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00