புதிய தொழிலாளர் சட்ட மசோதா முன் வரைவை திரும்பப் பெற வலியுறுத்தல் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டங்கள்

Sep 17 2019 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய தேசிய தொழிலாளர் சட்ட மசோதா முன்வரைவினை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் இந்திய தொழிலாளர் கட்சியினர் நூதன போரட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், புதிய தேசிய தொழிலாளர் சட்ட மசோதா முன் வரைவினை திரும்பப் பெற வேண்டும், புதிய தேசிய கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும் - EPF, ESI திட்டத்தில் பெறப்பட்ட தொழிலாளர்களின் நிதிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் திரு.P.R ஈஸ்வரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கழுத்தில் தூக்குக்‍ கயிறு மாட்டி நூதனப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கழுத்தில் கயிருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மனுவினை அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00