ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 47-வது அறிவியல் கண்காட்சி - பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

Oct 15 2019 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 47-வது அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

ஈரோட்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், 232 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் 345 படைப்புகளும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்ற 165 பள்ளிகளின் 208 படைப்புகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, வீடுகளில் பாதுகாப்பு கருவி அமைத்து பாதுகாப்பது, பட்டாசு மாசு ஏற்படுவதை தவிர்ப்பது உள்ளிட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியைச் ஏராளமான மாணவ- மாணவியர் கண்டு ரசித்தனர்.

உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு வேலூரில் கை கழுவும் பழக்கத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் 180 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 531 படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

திருவண்ணாமலையில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். ஆளில்லா குட்டி விமானம் மூலம் பறவைகளின் முட்டையை பாதுகாக்கும் பெட்டகம், காட்டுத்தீயை அணைக்கும் பந்து, தூய்மைப்படுத்தும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்டுப்பிடுப்புகளை கண்காட்சியில் வைத்து மாணவ மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர். 240 பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவியர்கள் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00