நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் செல்லாது : சட்டப்படி நடக்கவில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Oct 15 2019 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டப்படி நடத்தாததால் நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவையடுத்து வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில், 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் எனவும் விஷால் தரப்பில் ஆஜரான் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். மேலும், ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தல் செல்லாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00