மக்கள் நலனுக்காகத் தேவைப்பட்டால் ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் : கமல்ஹாசன், ரஜினி அடுத்தடுத்து அறிவிப்பு

Nov 20 2019 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்கள் நலனுக்காகத் தேவைப்பட்டால் ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் என கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் செஞ்சூரியன் தொழில்நுட்ப மேலாண்மைப் பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கமலுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் என தெரிவித்தார்.

இதேப்போல, கோவாவில் நாளை தொடங்கும் தேசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கோவா செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் கமலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி, தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று கூறினார்.



செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00