உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Dec 9 2019 8:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்‍கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில், 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு, சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் செய்யவேண்டும். 4 பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, ஆயிரம் ரூபாய் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, 600 ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 200 ரூபாய், 'டிபாசிட்' கட்டணமாக செலுத்த வேண்டும். வேட்பு மனுக்‍கள் மீதான பரிசீலனை, வரும் 17-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்‍களை திரும்பப்பெற, வரும் 19-ம் தேதி கடைசிநாள். ஜனவரி மாதம் 2-ம் தேதி, வாக்‍குகள் எண்ணப்படும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00