இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்கட்சியாக பதிவு :தமிழகம் முழுவதும் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்

Dec 9 2019 6:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தஞ்சை வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், கும்பகோணம் உச்சிபிள்ளையார் பகுதியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.M.ரெங்கசாமி தலைமையில், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், தஞ்சை வடக்கு மாவட்டக் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.சுரேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் நகர கழகம் சார்பில், அரக்கோணம் பேருந்து நிலையம் அருகில், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் திரு.துளசி, தக்கோலம் பேரூராட்சி நகர கழக செயலாளர் திரு.பலராமன் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், பார்க் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், சிலை அருகில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.சிட்டிசன் ஈஸ்வரன் தலைமையில் பட்டாசு வெடித்து கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் பிரிவு துணை செயலாளர் அ.விசாலாட்சி,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு.சூர்யா செந்தில், மாணவரணி இணைச் செயலாளர் திரு.பிரேம், மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு.சேகர், உள்ளிட்ட கழகத்தினர் திரளாக பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், சிவகங்கையிலுள்ள MGR சிலைக்கு மாலை அணிவித்தும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கழகத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கழக தலைமை நிலைய செயலாளர் திரு. KK. உமாதேவன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, கழக இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரி திரு.முருகன், மாவட்ட கழக செயலாளர் தேர்போகி திரு V. பாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், ராஜபாளையத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மாவட்டக் கழக செயலாளர் எதிர்கோட்டை திரு.SG. சுப்பிரமணியன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.KS.கந்தசாமி விக்னேஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா தனசேகரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.கதிரேசன், மாவட்ட மீனவரணி செயலாளர் திரு.மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.அய்யப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டக் கழகம் சார்பில், குன்னூர் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கழகத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டக் கழக செயலாளர் திரு.S.கலைச் செல்வன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.வெற்றிவேல், நகர செயலாளர் திரு.சையது முபாரக் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், திருவானைக்காவலில் உள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பு, கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ஆர். மனோகரன் தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்‍கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்டச் செயலாளர் திரு.புவனேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில், நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.செந்தில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், கழகச் செயலாளர் வழக்கறிஞர் திரு.வேல்முருகன் தலைமையில், கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவ்வழியாக பேருந்துகளில் வந்தவர்களுக்‍கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கழக அமைப்பு செயலாளர் திரு. அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00