ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல்

Dec 13 2019 9:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரக உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனுக்‍களை தாக்கல் செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தளி ஒன்றியத்தில் போட்டியிட உள்ள கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதே போல், கெலமங்கலம், சூளகிரி, வேப்பன அள்ளி, ஓசூர் ஆகிய ஒன்றியங்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் 60 பேர், அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வெம்பாக்கம் மற்றும் அனக்காவூர் பகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கழக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

தஞ்சை மாவட்டத்திற்கு 559 ஊராட்சி, பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 3 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 29 பேரும், ஊராட்சி மன்ற தலைவருக்கு 61 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

கடலூர் மேற்கு மாவட்டம், மேல் புவனகிரி, காட்டுமன்னார் கோயில், கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் பேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டை, குன்றாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் அலுவலரிடம் வழங்கினர்.

தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி குழு உறுப்பினர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தங்களது வேட்பு மனுக்களை வழங்கினர். அப்போது, ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00