சஹாரா நிறுவனர் அதிபர் சுப்ரதா ராய்க்கு, உச்சநீதிமன்றம் கைது வாரண்ட் - வரும் 4-ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு

Feb 26 2014 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தராதது தொடர்பான வழக்கில், பிரபல தொழில் அதிபரும் சஹாரா குழுமத் தலைவருமான சுப்ரதா ராய்க்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சஹாரா குழுமத்தில் முதலீடு செய்த 24 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தராதது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தனது தாயாரின் உடல்நிலையை காரணம் காட்டி, நேரில் ஆஜராக விலக்குக்கோரி, ராய் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சுப்ரதா ராய்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்து, வருகிற 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதிகள் திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரு.ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று உத்தரவிட்டது. சஹாரா குழுமத்தில் 3 கோடி பேர் முதலீடு செய்ததும், அவர்களுக்கான தொகையை திருப்பி தராததைக் கண்டித்து, 24 ஆயிரம் கோடி ரூபாயை செபி அமைப்பிடம் டெபாசிட் செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00