தேடுதல் இணையதளமான கூகுள் நிறுவனம் நில வரைபடப் போட்டி நடத்தியபோது விதிகளை மீறிய விவகாரம் - சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை

Jul 28 2014 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேடுதல் இணையதளமான கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நில வரைபடப் போட்டி நடத்தியபோது விதிகள் மீறப்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

நில வரைபடப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதிவு செய்த இந்திய வரைபடத்தில் தடை செய்யப்பட்ட வரைபடங்களை அனுமதியின்றி வெளியிட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது இந்திய நில அளவை அலுவலகம் புகார் அளித்துள்ளது. இதில், தேசிய வரைபட கொள்கை 2005-ன் படி அனுமதியின்றி நாட்டின் பரப்பளவை அளவிடவும், வரைபடம் தயாரிக்கவும் தனிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது ராணுவப் பயிற்சி மையங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளை போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00