நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியை மீண்டும் விடுமுறை தினமாக அறிவித்தது ஜார்கண்ட் அரசு

Jan 23 2020 8:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

விடுமுறை தின பட்டியலில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்தது.

ஜார்கண்டில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014-ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்‍கப்பட்டு வந்தது. ஆனால், 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையில், இந்த தினம் பொது விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த மாநில முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன், ஜனவரி 23-ஆம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து உத்தரவிட்டார். அதன்படி, முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேதாஜியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மாநிலத்துக்கும், தேசத்துக்கும் சேவை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என முதல்வர் சோரன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00