தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு : புதுச்சேரியில் ஓவியப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்பு

Jan 23 2020 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில தேர்தல் துறை சார்பில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் ஆணையம் சார்பில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பாரதி பூங்காவில், 50 அடி நீளமுள்ள வெள்ளைத் துணியில் ஓவியம் வரையும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, மக்களாட்சி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தேசிய கொடி, நாடாளுமன்றம், வாக்குப்பதிவு இயந்திரம், நீதி தேவதை, இந்திய தேசம், வாக்களிக்கும் முறை உள்ளிட்டவைகளை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு, வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00