கோகோய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் பணி : உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார் பெண் ஊழியர்

Jan 23 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு. ரஞ்சன் கோகோய் இருந்தபோது, அவர் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், கடந்த 2018-ம் ஆண்டு, இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, அப்போதைய தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் தெரிவித்தார். புகாரை, உச்சநீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும், பிரமாணப் பத்திரமாக அனுப்பினார். புகாரை விசாரித்த தற்போதைய தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக்‍ கூறி வழக்‍கை தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து, திரு. கோகோய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் மீது, டெல்லி திலக் நகர் காவல்நிலையத்தில் மோசடிப் புகார் அளிக்‍கப்பட்டதையடுத்து, அப்பெண், பணிநீக்‍கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த பெண் ஊழியருக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர், பணிக்கு வராத காலம் விடுமுறையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00