ஏர் இந்தியா 100 சதவீத பங்குகளும் விற்பனை-மத்திய அரசு அறிவிப்பு : அரசின் முடிவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை

Jan 28 2020 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர் இந்தியா நிறுவனத்தின் நூறு சதவிகிதப் பங்குளையும் தனியாருக்‍கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு, தேச விரோத நடவடிக்‍கை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் திரு. சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்‍குத் தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

பெருமளவிலான கடன் சுமையில் தொடர்ந்து தள்ளாடிவரும் ஏர் இந்தியா நிறுவனம், கடந்த நிதியாண்டில் 25 ஆயிரத்து 509 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து, நாள்தோறும் சுமார் 25 கோடி ரூபாய் இழப்புடன் பயணித்து வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியாவின் 76 சதவிகிதப் பங்குகளை தனியாருக்‍கு விற்பனை செய்யும் அறிவிப்பை, 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், பேரிழப்பில் ​சிக்‍கியுள்ள ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஏர் இந்தியாவின் நூறு சதவிகிதப் பங்குகளையும் தனியாருக்‍கு விற்பனை செய்யவுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பங்குகளை வாங்க முன்வரும் நிறுவனங்கள், அதற்கான விருப்ப விண்ணப்பங்களை, வரும் மார்ச் 17ம் தேதிக்‍குள் சமர்ப்பிக்‍க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் இந்த முடிவுக்‍கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் திரு. சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்‍கு விற்பனை செய்யும் முடிவு, தேசத் துரோக நடவடிக்‍கை எனக்‍ குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் திரு. சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00