ஷாகின்பக் போராட்டக்காரர்கள் அமித் ஷா இல்லம் நோக்கி பேரணி : சி.ஏ.ஏ. குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தல்

Feb 16 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஷாகின்பக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மத்திய உள்துறை அமித்ஷாவின் இல்லம் நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கூறி டெல்லி ஷாகின்பக் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வெளிப்படையாக விவாதம் நடத்தத் தயார் என்றும், விவாதம் நடத்த விருப்பம் தெரிவிப்பவர்களிடம், மூன்று நாட்களுக்குள் நேர‌த்தை தெரிவிப்பேன் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஷாகின்பக் போராட்டக்காரர்கள், இச்சட்டம் குறித்து அமித்ஷாவுடன் விவாதிப்பதற்காக, அவரது இல்லம் நோக்கி பேரணியாக செல்லத்தொடங்கியுள்ளனர். இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கதபோதிலும், போராட்டக்காரர்கள் பேரணியைத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00