டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து - டுவிட்டரில் பிரதமருக்கு கெஜ்ரிவால் நன்றி

Feb 17 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி முதலமைச்சராக, மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள திரு. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டெல்லி முதலமைச்சராக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். இந்த விழாவில் பங்கேற்கும்படி, பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டுவிட்டரில், பிரதமர் திரு. நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியை அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நகரமாக மாற்ற, நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00