2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் அமெரிக்‍க அதிபர் டிரம்ப் - அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு

Feb 24 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மனைவியுடன் வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் தம்பதியரை பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றார். டிரம்பின் வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மனுசின், வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர்.

ஏர்போர்ஸ்-1 விமானம் மூலம் இன்று முற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தம்பதியருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர், குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி மற்றும் அமெரிக்க தூதர் உள்ளிட்ட அதிகாரிகள் டிரம்புக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில், சங்கொலி எழுப்பி பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் குஜராத் மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டவாறு அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளி மாணவர்கள், இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கொடிகளை கையில் ஏந்தி அதிபர் டிரம்பை உற்சாகமாக வரவேற்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநில நடனக்கலைஞர்கள் ஆடல், பாடலுடன், டிரம்ப் தம்பதியரை வரவேற்றனர்.

வழிநெடுகிலும் 30க்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு, இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குஜராத்தின் பிரபல கார்பா நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களை நடனக்கலைஞர்கள் நிகழ்த்தினார்கள்.

பின்னர், அகமதாபாத் Motera பகுதியில் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் 'நமஸ்தே டிரம்ப்' என்னும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். பிரதமர் திரு.மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, ஹூஸ்டன் நகரத்தில் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியைப் போன்று இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் காலை முதலே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மைதானத்தை சுற்றிலும் குதிரைப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் போலீஸ் பிரிவான Chetak கமாண்டோ படை வீரர்களும், அதிவிரைவு நடவடிக்கை படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளையொட்டி அகமதாபாத் நகரில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகமதாபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலையில் அதிபர் டிரம்ப், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட செல்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00