ஒடிசா மாநிலத்தில், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை - சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

Feb 27 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலத்தில், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை என்று, அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. Samir Ranjan Dash தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் ந‌டைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில், உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த, பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. Samir Ranjan Dash, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி, 34 ஆயிரத்து 394 பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை என்றும், 90 பள்ளிகளில், கரும்பலகைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

35 ஆயிரத்து 769 பள்ளிகளில், 2018 - 2019 வரை மின்சார வசதி இல்லை என்றுக் குறிப்பிட்ட அவர், 37 ஆயிரத்து 645 பள்ளிகளில், விளையாட்டு மைதானங்கள் இல்லை என்றும், 2 ஆயிரத்து 451 பள்ளிகளில், நூலகங்கள் இல்லை என்றும், 16 ஆயிரத்து 368 பள்ளிகளில் எல்லை சுவர்கள் இல்லை என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. Samir Ranjan Dash குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00