கொலீஜியம் நடைமுறைப்படியே நீதிபதி முரளிதர் இடமாற்றம் : மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

Feb 27 2020 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலீஜியம் நடைமுறைப்படியே நீதிபதி திரு. முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்ததுடன், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்‍கு பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு. முரளிதர், பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி திரு. முரளிதரின் பணியிட மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி, உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்ததிருந்த பரிந்துரையின் நடைமுறைப்படியே நீதிபதி திரு. முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், நீதித்துறையின் நன்மதிப்பை குலைக்‍கும் வகையில், மத்திய அரசு மீது, காங்கிரஸ் கட்சி, தவறான கருத்துகளை கூறிவருவதாகவும், அவை கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00