டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Feb 28 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று, அம்மாநில முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஜாப்ராபாத், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, இருதரப்பினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதனால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தினர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில், தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உட்பட இதுவரை, 38 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று, அம்மாநில முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கலவரத்தில் வீடுகளை இழந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00