கொரோனாவை கட்டுப்படுத்தியது போல் சரிந்த பொருளாதாரத்தை மீட்பதிலும் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை

May 30 2020 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலகிற்கு எடுத்துக்‍காட்டாக திகழும் இந்தியா, சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் முன் உதாரணமாக இருக்கும் என பிரதமர் திரு. நரேந்திர மோதி நம்பிக்‍கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில், மத்தியில், பா.ஜ.க. கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து இன்றுடன் முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனையொட்டி திரு. மோதி, நாட்டு மக்‍களுக்‍கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்‍கள் அனுபவிக்‍கும் பல்வேறு துயரங்கள் குறித்து, தான் நன்கு உணர்வதாக தெரிவித்துள்ளார். இக்‍கட்டான இந்நேரத்தில், மக்‍களின் வாழ்த்து தமக்‍கு வேண்டும் என்று கேட்டுக்‍கொண்டுள்ளார்.

தன்னிடம் வேண்டுமானால் குறைபாடுகள் இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. மோதி, நாட்டிலோ, நாட்டு மக்‍களிடமோ குறைகள் இல்லை என்பதை, உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, அயோத்தி விவகாரம், முத்தலாக்‍ உள்ளிட்ட முக்‍கிய பிரச்னைகளுக்‍கு, மத்திய பா.ஜ.க. அரசு தீர்வு கண்டுள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலகிற்கு எடுத்துக்‍காட்டாக திகழும் இந்தியா, சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் முன் உதாரணமாக மாறும் என பிரதமர் திரு. நரேந்திர மோதி நம்பிக்‍கை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00