கொரோனா ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்‍களின் பொருளாதார நெருக்‍கடி மேலும் தீவிரமடையும் நிலை - பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக பணம் வழங்குவது குறித்து பரிசீலிக்‍கும் என மத்திய அரசு தகவல்

May 30 2020 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்‍களின் பொருளாதார நெருக்‍கடி மேலும் தீவிரமடையும் நிலையில், அவர்களுக்‍கு நேரடியாக பணத்தை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்‍கும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன.

கொரோனா பரவலை தடுக்‍க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களும், ஏழை மக்‍களும், கைகளில் செலவுக்‍கு பணமின்றி திண்டாடி வருவதோடு, உணவுக்‍கும் வழியின்றி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு உதவும் வகையில், அவர்களின் கைகளில் நேரடியாக பணம் கொடுக்‍க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால், பணத்தை அச்சடித்து ஏழை மக்‍களுக்‍கு வழங்க வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்களும் மத்திய அரசை அறிவுறுத்தி வருகின்றனர்.

இவ்விவகாரம் குறித்து இதுவரை மவுனம் காத்துவந்த மத்திய அரசு, தற்போது இதுகுறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்‍களின் பொருளாதார நெருக்‍கடி மேலும் தீவிரமடையும் நிலையில், அவர்களுக்‍கு நேரடியாக பணத்தை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், தேவைப்பட்டால், அதிகமான பணத்தை அச்சடித்து மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன. இதனிடையே, வேலையிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து பட்டியலிட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திடம் மத்திய நிதியமைச்சகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00