டெல்லியில் கொரோனா அச்சுறுத்தலால், நிரந்தர ஊரடங்கை அமல்படுத்த முடியாது - வைரஸ் தொற்றை கையாள்வதில், டெல்லிஅரசு முன்னோடியாக உள்ளது எனவும் முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து

May 30 2020 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா அச்சுறுத்தலால், நிரந்தர ஊரடங்கை அமல்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், வைரஸ் தொற்றை கையாள்வதில், டெல்லி அரசு, 4 படிகள் முன்னே இருப்பதாக கூறியுள்ளார்.

கொரோனா தேசிய ஊரடங்கு 5-ம் கட்டமாக நீட்டிக்‍கப்படும் என தகவல் வெளியாகிவுள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதை மறுக்‍க முடியாது எனத் தெரிவித்த அவர், இருந்தபோதிலும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனக்‍ கூறினார். தலைநகரில், கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மக்‍களில், 2 ஆயிரத்து 100 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்களுக்‍கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தலால், நிரந்தர ஊரடங்கை அமல்படுத்த முடியாது எனக்‍ கூறிய அவர், வைரஸ் தொற்றை கையாள்வதில், டெல்லி அரசு, 4 படிகள் முன்னே இருப்பதாக தெரிவித்தார். மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்‍கென தற்போது 6 ஆயிரத்து 500 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும், வரும் வாரத்தில் 9 ஆயிரத்து 500 படுக்‍கைகள் தயாராகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00