கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்‍கை

Jul 9 2020 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

இயல்பிலேயே இந்தியர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றும், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்தியா குளோபல் வீக்‍2020 என்னும் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் திரு. மோதி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 30 நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாற்றிய பிரதமர் திரு. மோதி, சவால்களைக் கடந்த வரலாறு இந்தியாவிடம் உள்ளதாகவும், இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறினார். பொருளாதார வளர்ச்சிக்‍கான வலுவான போரை இந்தியா நடத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், உலகில் உள்ள பெருநிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்தார். இயல்பிலேயே இந்தியர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றும், இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் கூறினார். கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என்றும் நம்பிக்‍கை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00