ராஜஸ்தான் அரசியலில் நிலவும் உட்டகட்ட குழப்பம் : பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு

Jul 13 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர ஹூடா தெரிவித்திருப்பது, அம்மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வரலாம் என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர ஹூடா, அசோக் கெலாட்டிடம் பெரும்பான்மை உள்ளதாகவும், பாஜகவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உளந்தாகவும் கூறினார். தாங்கள் இழக்கும் எம்.எல்.ஏ.க்களை விட பாஜகவில் இருந்து அதிக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00