ராஜஸ்தான் மாநிலத்தில் நீடிக்‍கும் அரசியல் குழப்பம் - சச்சின் பைலட்டிற்காக கதவுகள் திறந்திருப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

Jul 13 2020 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சச்சின் பைலட்டிற்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.ரன்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் திடீரென நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது. மேலும், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் இப்பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதலமைச்சர் அசோக்‍ கெலாட் இல்லத்தில் நடைபெற்றது. இதில், 90-க்‍கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்‍கள் பங்கேற்றனர். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜ்வாலா, அவினாஷ் பாண்டே, Ajay Makken ஆகியோர் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் சென்றனர்.

கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த திரு.ரன்தீப் சுர்ஜ்வாலா, சச்சின் பைலட்டிற்காக காங்கிரசின் கதவுகள் திறந்தே உள்ளதென தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும் எனவும், வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனவும், திரு.ரன்தீப் சுர்ஜ்வாலா அழைப்பு கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00