ஊரடங்கு காலத்தில் பயணிக்க முடியாத விமான பயணச்சீட்டுகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் - உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தகவல்

Sep 24 2020 9:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை முழுமையாக திருப்பி அளிக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பொதுமுடக்கத்துக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுக்கான தொகை சம்மந்தப்பட்ட பயணிகளின் பெயரில் வரவு கணக்கில் வைக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்தது. அந்த தொகையை பயணிகள் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்‍கப்பட்டது. பொது முடக்க காலத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து தேவைப்பிரிவு முடிவெடுக்கும் எனவும் நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00