வேளாண் மசோதாக்களைக் கண்டித்து போராட்டம் : பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல்

Sep 25 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் பல்வேறு இடங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் 2-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, Kisan Mazdoor Sangharsh Committee சார்பில் மூன்று நாள் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் நகரில் 2வது நாளாக விவசாயிகள், தங்களது குடும்பத்துடன் இன்று தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 1ம் தேதி முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெடுஞ்சாலை மற்றும் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில், வேளாண் சட்டத்தைக்‍ கண்டித்து, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ், டிராக்‍டரை ஓட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அக்‍கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று பேரணியாகச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00