புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 5-ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Oct 28 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்படுமென விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

டெல்லியில் 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடுவது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு அலுவலங்கள் முன்பாகவும், பா.ஜ.கவின் அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தப்படுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பஞ்சாபிற்கு சரக்கு ரயில் போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள், மத்திய அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை, ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00