வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே பிரிவினையை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி - விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு

Dec 3 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 35-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இது குறித்து மத்திய அரசு பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடையே பிரிவினையை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 507 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் திரு.மோதி சந்திக்‍கும் வரை, மத்திய அரசின் எவ்வித பேச்சுவார்த்தையிலும் விவசாய சங்கங்கள் கலந்து கொள்ளாது என கிசான் மஸ்தூர் சங்கத்தின் இணைச் செயலாளர் திரு. சுப்ரான் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து 8-வது நாளாக தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00