வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் திட்டவட்டம்

Dec 3 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லியில், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் து‌றை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்ட தேநீர் மற்றும் மதிய உணவை விவசாயிகள் வா‍ங்க மறுத்து விட்டதுடன், தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உ‌டனடியாக கூட்டி, விவசாயிகளுக்கு எதிரான சட்டப் பிரிவுக‌ளை நீக்க வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், டெல்லியை விட்டு செல்ல மாட்டோம் என கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00