கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உயிரிழந்த விவகாரம் - மத்திய சுகாத‌ாரத் துறை அமைச்சகம் விளக்கம்

Jan 19 2021 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இரண்டு ‍பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட, உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த, 46 வயதாகும் சுகாதாரப் பணியாளர் மஹிபால் சிங் என்பவர் திடீரென உயிரிழந்தார். இதே போல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதாகும் நபர் மரணமடைந்தார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இரண்டு பேரும் உயிரிழக்கவில்‌லை என்றும், மாரடைப்பு மற்றும் இருதய செயலிழப்பு போன்ற காரணங்களால் இருவரும் மரணமடைந்ததாகத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 580 பேருக்கு மட்டுமே லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கேட‌்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00