தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு - டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அட்டவணையை வெளியிடுகிறார்

Feb 26 2021 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்‍கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்‍கப்படுகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய டெல்லியில் நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவமும் வந்துள்ளது. இந்நிலையில், 5 மாநில சட்டமன்றங்களுக்‍கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்‍கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் மாலை 4.30 மணியளவில், தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்‍கின்றனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00