புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 102-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் - டெல்லி செல்லும் சாலைகளில் மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்

Mar 7 2021 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாளை தாண்டியுள்ளது. சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

இந்நிலையில் வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளை மதிப்பதில் முன்னுரிமை அளித்து வருவதால், வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளர். அதற்காக இந்த சட்டங்களில் குறைபாடு இருப்பதாக அர்த்தம் அல்ல என கூறிய திரு. நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் தொடர்ந்து போராடுவதால், அவர்களின் உணர்வுகளை மதித்தே இந்த பரிந்துரையை அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00