45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் லக்னோ நகரில் இன்று நடைபெறுகிறது - பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்

Sep 17 2021 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், பெட்ரோல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள், விமான பெட்ரோல் போன்ற குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் பழைய வாட் வரி முறையிலேயே நீடிப்பதால், அவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்‍கு அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி-க்‍குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்‍னோவில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 45-வது கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்‍கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும், வீடுகளுக்‍கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை ஜிஎஸ்டி-க்‍குள் கொண்டு வந்து 5 சதவீத வரி விதிப்பது குறித்தும், 11 கொரோனா மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரி சலுகையை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00