டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.8 குறைப்பு : விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல்

Dec 1 2021 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல் மீதான வாட் வரியை டெல்லி அரசு 8 ரூபாய் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அங்கு அமலுக்‍கு வருகிறது.

கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் எரிபொருட்கள் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்‍க வேண்டும் என்று அறிவுறுத்தியது. தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், வாட் வரியை குறைக்‍க முடியாது என தெரிவித்த நிலையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்‍கப்பட்டது. இந்நிலையில் டெல்லி அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியானது 30 சதவீதத்திலிருந்து 19 புள்ளி 4 பூஜ்ஜியம் சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதன் மூலம், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 ரூபாய் 97 காசாக குறைகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00