ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிட மாற்ற விதிகளில் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு - மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Jan 21 2022 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிட மாற்ற விதிகளில் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்தியப் பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில், விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மீண்டும் பிரதமருக்‍கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த திருத்தங்களால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ள அவர், அத்தகைய திருத்தங்கள் கூட்டாட்சி தன்மையையும், அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். விதிகளை திருத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால் ஜனநாயகத்தை காப்பதற்காக பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் செல்வி மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00