டெல்லியில் வாரஇறுதி நாட்களில் அமலில் உள்ள முழு ஊரடங்கை தளர்த்த முதலமைச்சர் கெஜ்ரிவால் முடிவு - தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களுக்‍கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகளை அறிவிக்‍க உள்ளதாகவும் தகவல்

Jan 21 2022 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் வாரஇறுதி நாட்களில் அமலில் உள்ள முழு ஊரடங்கை தளர்த்த முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து துணைநிலை ஆளுநருக்‍கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளற்ற அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு, ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபான விடுதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், உணவகங்களில் பார்சல் சர்வீசுக்‍கு மட்டும் அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்குடன், வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கும் அமல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். வாரஇறுதி நாட்களில் அமலில் உள்ள முழு ஊரடங்கை தளர்த்தவும், வணிக வளாகங்களை திறக்‍கவும், 50 சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளிக்‍க திரு.கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். தனது முடிவை துணை நிலை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00