புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது அதிர்ச்சிகர சம்பவம் : கத்தியை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

Aug 5 2022 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, பெண் ஒருவர் கத்தியை தனது கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அடுத்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். தனது பூர்வீக நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசிப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தனது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில், யுவராஜ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றி யுவராஜிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இதை நீதிமன்ற அமீனா வெங்கட், சர்வேயர், மின் துறை, காவல்துறையினருடன் அங்கு சென்று, நீதிமன்றம் உத்தரவு நகலை காண்பித்து ஆக்கிரமிப்புகளை இடிக்க தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் நக்கீரன், அவரது மனைவி சுதா மற்றும் குடும்பத்தினர் நீதிமன்ற அமீனா வெங்கட்டிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று சுதா தனது கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு, வீடுகளை இடித்தால் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பிரிவின் கீழ் சுதா உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00