பீகாரில் பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார் - ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்

Aug 10 2022 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்து வந்தது. இந்நிலையில், பாட்னாவில் தனது கட்சி எம்.எல்.ஏக்‍களிடம் நேற்று ஆலோசனை நடத்திய பீகார் முதலமைச்சர் திரு.நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் திரு. பகு செளஹானை, முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் நேற்று மாலை 4 மணி அளவில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

பீகாரில் திரு.லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திரு. நிதிஷ்குமார் புதிய அரசை அமைக்‍க முடிவு செய்துள்ளார். இதன்படி, பாட்னாவில் நடைபெற்ற கூட்டணி கூட்டுக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியின் தலைவராக திரு. நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பீகார் ஆளுநர் திரு. பகு செளஹானை மீண்டும் சந்தித்த நிதிஷ்குமார், கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 79 எம்.எல்.ஏக்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 45 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 19 எம்.எல்.ஏக்கள் மற்றும் 16 இடதுசாரி எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்படி, பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பது உறுதி ஆகியுள்ளது. இதேபோல் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க உள்ளார். ராஜினாமா, ஆட்சியமைக்க உரிமை கோரல் என ஒரேநாளில் அரங்கேறிய சம்பவங்கள் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பீஹார் முன்னாள் முதலமைச்சர் திரு.Jitan Ram Manjhi தலைமையிலான Hindustani Awam Morcha கட்சியும், திரு.நிதீஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து திரு.நிதீஷ்குமார் வெளியேறியதை, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00