பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு, ஒரேயாண்டில் 26 லட்சம் ரூபாய் அதிகரிப்பு - மொத்த சொத்து மதிப்பு 2 கோடியே 23 லட்சம் என தகவல்

Aug 10 2022 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு.மோடியின் சொத்து மதிப்பு, ஓராண்டில் 26 லட்சம் ரூபாய் அதிகரித்து, 2 கோடியே 23 லட்சமாக உயர்ந்துள்ளது.

பிரதமர் திரு.மோடி அண்மையில் தனது சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், தன்னிடம் மொத்தமாக 2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இவை பெரும்பாலும் வைப்பு தொகையாக உள்ளதாகவும், அசையும் சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். காந்தி நகரில் உள்ள நிலத்தின் பங்கையும் நன்கொடையாக வழங்கி விட்டதால், அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான தகவல்களின்படி பத்திரங்களில் முதலீடு, பங்கு, பரஸ்பர நிதி எதுவும் இல்லை. சொந்தமாக வாகனமும் இல்லை. ஆனால், 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமரின் அசையும் சொத்துக்கள் ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00