வெளிநாடு செல்லும் பயணிகளின் விவரங்களை பயணத்திற்கு முன்பே மத்திய அரசுக்‍கு அனுப்ப வேண்டும் : விமான நிறுவனங்களுக்‍கு உத்தரவு

Aug 10 2022 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாடு செல்லும் பயணிகளின் அனைத்து விவரங்களையும் பயணத்திற்கு முன்பே மத்திய அரசுக்‍கு அனுப்ப வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்‍கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே சுங்கத்துறையிடம் சமர்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகளின் பெயர், வயது, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பயணச்சீட்டு முன்பதிவு செய்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டு எண் என அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பொருளாதார குற்றங்களை தடுப்பதற்காக, PNR தகவல் ஒழுங்குமுறை விதிமுறையில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், PNR விவரங்களை சேகரிக்கும் 60 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00