என்.ஐ.ஏ. இயக்குனர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு - என்.ஐ.ஏ.வின் அதிரடி சோதனைக்கு மத்தியில் ஆலோசனை

Sep 22 2022 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அடுத்தக்‍கட்ட நடவடிக்‍கை குறித்து உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா முக்‍கிய ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளா, தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றது. இதில், பல்வேறு நிர்வாகிகளின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் இயக்குநர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00